தலதாமாளிகைக்கு சென்று வழிபாடுகளில் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா!
இலங்கைக்கான இந்தியத் புதிய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஸ்ரீ தலதா மாளிகைக்குச் சென்று வழிபாடுகளில் கலந்து கொண்டார்.
வழிபாடுகளில் கலந்துகொண்ட உயர்ஸ்தானிகர் மல்வத்து மற்றும் அஸ்கிரிய விகாரைகளுக்குச் சென்று பீடாதிபதிகளைச் சந்தித்த உயர்ஸ்தானிகரிடம் இரு நாடுகளுக்கிடையில் கடந்த காலத்திலிருந்து நிலவும் நட்புறவு மற்றும் இலங்கையின் அபிவிருத்திக்கு இந்திய அரசாங்கத்தின் பங்களிப்பு குறித்து அவர்கள் தெரிவித்தனர்.
இங்கு இலங்கைக்கான தூதுவராக பதவியேற்கும் முன்னர் இந்திய அரசியல் தலைமைத்துவம் இந்த நாட்டு மக்களுக்கு சிறந்த சேவையை செய்யுமாறு தமக்கு அறிவித்ததாக தூதுவர் பிரமுகர்களிடம் தெரிவித்தார்.
பல நூற்றாண்டுகள் பழைமையான இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்துவதற்கு முன்னைய உயர்ஸ்தானிகர் பெரும் பங்களிப்பை வழங்கினார் எனவும், புதிய தூதுவரும் அவ்வாறே செய்வார் என தாம் நம்புவதாகவும் மல்வத்து விகாரையின் பீடாதிபதி வண. ஸ்ரீசித்தார்த்த சுமங்கலதேரர் தெரிவித்தார்.
சகோதர நாடான இந்தியா, இலங்கையின் வளர்ச்சிக்கு எப்போதும் உறுதுணையாக இருப்பதுடன், இந்தியாவில் இருந்து தூய பௌத்த மதம் வந்தமையால் இரு நாடுகளுக்கும் இடையில் உடைக்க முடியாத மத, கலாசாரப் பிணைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கண்டியில் உள்ள இந்திய உதவி உயர்ஸ்தானிகர் டாக்டர் அதிரா எஸ். உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
கருத்துக்களேதுமில்லை