கிளிநொச்சியில் ரயில் விபத்தில் இரு பிள்ளைகளின் தந்தை பலி!

கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் ரயில் விபத்தில் சிக்கி இளம் குடும்பத்தர் பலியாகியுள்ளார்.

குறித்த விபத்து வியாழக்கிழமை பிற்பகல் 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

அனுராதபுரத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த யாழ்ராணி ரயிலுடன் மோதுண்டே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் முறிகண்டி பகுதியை சேர்ந்த 43 வயதுடைய கேதீஸ்வரன் விஜயானந்தன் எனும் 2 பிள்ளைகளின் தந்தையான ரிப்பர் சாரதியே உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தில் உயிரிழந்த நபரின் சடலம் ரயில்வே அதிகாரிகளால் கிளிநொச்சி ரயில் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

பின்னர் சடலம் புகையிரத நிலைய அதிகாரிகளால் கிளிநொச்சி வைத்தியசாலையிடம் ஒப்படைக்கப்பட்டது.

பொலிஸ் விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் சடலம் கையளிக்கப்படவுள்ளதாக ரயில்வே நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.