தமிழரசுக் கட்சியின் புதிய தலைவருக்கு செந்தில் தொண்டமான் வாழ்த்துக்கள்!

தமிழரசுக் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சிவஞானம் சிறீதரனுக்கு கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

உங்களுடைய சேவைக் காலத்தில் தமிழ் மக்களுக்கான உரிமைகள் வென்றெடுக்கப்பட்டு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும் என்பதோடு, வடக்கு கிழக்கு தமிழர்கள் மாத்திரமின்றி நாடு முழுவதும் உள்ள தமிழர்கள் மேன்மேலும் வளர்ச்சி அடையத் தங்களின் பணி தொடர வேண்டும் என வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.