புதையல் தோண்டிய நால்வர் கஹதுடுவ பொலிஸால் கைது!

கிரிவட்டுடுவ பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றின் முன்பாக புதையல் தோண்டிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உட்பட நால்வர் கஹதுடுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதையல் தோண்டுவதாகக் குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு  கிடைத்த தகவலின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் இளம் தம்பதிகள், பெண்ணின் சகோதரர் மற்றும் வெளிநாட்டவர் ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது தண்ணீர் மோட்டர், மண்வெட்டிகள், இரும்பு கத்திகள் போன்ற பல  உபகரணங்களும் பொலிஸாரால்  கைப்பற்றப்பட்டுள்ளன.

பொலிஸார் இவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது கிணறு தோண்டப் போவதாக இவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்தனர் எனவும்  புதையல்  தோண்டிய இடத்தில் எட்டு அடி ஆழமும், 6 அடி அகலமும் தோண்டப்பட்டிருந்தன எனவும்  பொலிஸார்  மேலும் தெரிவித்தனர்.

கைதானவர்கள் கெஸ்பேவ நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கஹதுடுவ  பொலிஸார் மெற்கொண்டு வருகின்றனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.