மாத்தறை துப்பாக்கிப் பிரயோகம்: உயிரிழந்தவர் இலக்கு அல்லவாம்!  பொலிஸார் சந்தேகம்

மாத்தறை, மாலிம்பட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட  தெலிஜ்ஜவிலவில்  உள்ள கையடக்கத் தொலைபேசி உபகரண விற்பனை நிலையமொன்றில் கடந்த 20 ஆம் திகதி இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்  உயிரிழந்த நபரை இலக்கு வைத்தது  அல்ல  என விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் 24 வயதான வெலிபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞராவார்.

துப்பாக்கிச் சூடு நடந்தபோது கடையின் உரிமையாளர் கடையின் முன்பாக நின்று கொண்டிருந்துள்ளார்.  உயிரிழந்த இளைஞர்   தனது கையடக்கத் தொலைபேசியை சார்ஜ் செய்வதற்காக கடைக்குள் இருந்தமை தெரிய வந்துள்ளது.

இந்த இளைஞர்  கொரியாவுக்குச் செல்ல எதிர்பார்த்திருந்தார் எனவும் தெரிய வந்துள்ளதுடன்  பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் அவர் எந்தக் குற்றத்துடனும் ஈடுபாடு கொண்டவர் அல்லர் என்பதும் தெரிய வந்துள்ளது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.