நாட்டிலுள்ள பாடசாலைகளிலேயே மாணவர்களுக்குத் தொழிற் கல்வி! கல்வி அமைச்சர் சுசில் தகவல்
இந்த வருடம் கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையை நிறைவு செய்யும் மாணவர்களுக்கு ஆங்கில மொழி உட்பட தகவல் தொழில்நுட்பம் பற்றிய அறிவுடன் தொழில் கல்வியை கற்பிக்கும் வேலைத்திட்டம் பெப்ரவரி மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
உயர்தரக் கல்வியை நிறைவு செய்யும் மாணவர்களை தொழில் கல்வியை நோக்கி வழிநடத்தும் நோக்கில், நாடளாவிய ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட 299 பாடசாலைகளில் இந்தத் தொழிற்பயிற்சித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இவ்வருடம் கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்குத் தோற்றியுள்ள மாணவர்கள் பெப்ரவரி 9 ஆம் திகதிக்கு முன்னர் இந்தத் திட்டத்தில் தங்களைப் பதிவு செய்துகொள்ள முடியும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இது தொடர்பான மேலதிக தகவல்களை பிரதேச செயலகங்களின் திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்களிடம் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை