தேசபந்து தென்னக்கோனை பொலிஸ்மா அதிபராக நியமிப்பதை தடுக்கக் கோரிய மனு விசாரணை 31இல்! பேராயர் கர்தினால் தாக்கல் செய்தது

பதில் பொலிஸ் மா அதிபரான தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக  நியமிப்பதைத் தடுக்குமாறு கோரி கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை  தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை எதிர்வரும் 31 ஆம் திகதி பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரிதி பத்மன் சூரசேன, அச்சல வெங்கப்புலி மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே, நீதிமன்றத்தில் தனது வாதங்களை முன்வைத்தார்.

இந்நிலையில் இந்த மனுவை எதிர்வரும்    31 ஆம் திகதி  பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.