எந்த தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலிலும் யுக்தியவை முன்னெடுக்கவில்லை! அடித்துக்கூறுகிறார் தேசபந்து தென்னக்கோன்
யுக்திய நடவடிக்கையை தனிப்பட்ட நிகழ்ச்சிநிரலின் அடிப்படையில் முன்னெடுக்கவில்லை என பதில்பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
யுக்தியவில் தனிப்பட்ட நிகழ்ச்சிநிரல் எதுவுமில்லை பாதள உலகத்தினரை அழிப்பது, போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைதுசெய்வது குறித்து மாத்திரமே கவனம் செலுத்தப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
யுக்தியநடவடிக்கையின்போது துன்புறுத்தல்கள் சித்திரவதைகள் இடம்பெறுகின்றன என்ற குற்றச்சாட்டை நிராகரித்துள்ள அவர் பாதளஉலகத்தினருக்கு எதிரான உறுதியான கரமொன்று அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.
பாதாள உலகத்தினர் கடத்தல்காரர்களுடன் எந்த நிகழ்ச்சிநிரலும் இல்லை பாதள உலகத்தினரை அழிப்பதே எங்களின் பொதுவான நோக்கம் எவருடனும் எந்த தனிப்பட்ட விவகாரமும் இல்லை. போதைப்பொருள் பாதளஉலகத்துடன் தொடர்புபட்ட ஒவ்வொரு நபரும் எங்களின் எதிரிகள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்
கருத்துக்களேதுமில்லை