யாழில் இரு பஸ்கள் மோதி விபத்து; 8 பேர் வைத்தியசாலையில் அனுமதி
யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை வீதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை இரண்டு பஸ்கள் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளன.
குறித்த விபத்தில் 08 பேர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
யாழ். நகரை நோக்கி வந்து கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபை பஸ் ஒன்றும் தனியார் பஸ் ஒன்றும் மோதியே விபத்து இடம்பெற்றுள்ளது என முதல் கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை