நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் அரசை மேலும் ஏதேச்சதிகார தன்மை வாய்ந்ததாக மாற்றும்! எரான் விக்ரமரத்ன சுட்டிக்காட்டு

நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படுகின்ற நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் மக்களின் பேச்சுசுதந்திரத்திற்கு பாரிய அடியாக அமையும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரட்ண தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பெண்கள் சிறுவர்களின் உரிமைகளை பாதுகாப்பதே இந்த சட்டத்தின் நோக்கங்களில் ஒன்று என அரசாங்கம் தெரிவிக்கின்றது எனினும் அந்த சட்டமூலத்தில் பெண்கள், சிறுவர்கள் என்ற வார்த்தையே இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் பொலிஸார் நீதிமன்ற உத்தரவின்றி பத்திரிகையாளர்கள் சிவில் சமூக செயற்பாட்டாளர்களின் மொபைல்போன்களை பறிமுதல் செய்யலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது ஜனநாயகத்திற்கு வழிவகுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சட்டமூலத்தில் ஜனநாயக விரோத அம்சங்கள் உள்ளன. இந்த சட்டமூலம் மக்களின் சுதந்திரத்தைப் பறிக்கும் எனவும் எரான் விக்கிரமரட்ண தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் நேரடி கண்காணிப்பின் கீழ்; ஆணைக்குழுவொன்றை அமைக்கும் யோசனையையும் இந்த சட்ட மூலம் முன்வைக்கின்றது. இதுவரை காலம் நீதிமன்றங்கள் அனுபவித்த அதிகாரங்கள் எதிர்காலத்தில் இந்த ஆணைக்குழுக்களிற்கு வழங்கப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சட்டமூலம் அரசாங்கத்தை மேலும் அதிகளவு ஏதேச்சாதிகார தன்மை வாய்ந்ததாக மாற்றும் மக்களின் உரிமைகளிற்கு இது எதிரானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.