கோப்பாயில் கசிப்புடன் பெண்ணொருவர் கைது
யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் கசிப்புடன் பெண்ணொருவர் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
இவரிடமிருந்து 10 லீற்றர் கசிப்பு பொலிஸாரால் மீட்கப்பட்டதுடன் இவர் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரியவந்துள்ளது.
சந்தேக நபரை நீதிமன்றத்தில் முற்படுத்தி மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது
கருத்துக்களேதுமில்லை