மாத்தறை – கதிர்காமம் வீதியில் விபத்தில் ஐவர் படுகாயமடைவு!
மாத்தறை – கதிர்காமம் பிரதான வீதியில் ஹூங்கம மெதஎலிய பிரதேசத்தில் புதன்கிழமை வான் ஒன்றும் சிறிய லொறியும் மோதி விபத்துக்குள்ளானதில் ஐவர் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பேருவளை பகுதியிலிருந்து கதிர்காமம் நோக்கிச் சென்ற வான் பாதையை விட்டு விலகி முன்னால் வந்த லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் குறித்த வான் பலத்த சேதமடைந்ததுடன் ஐவர் காயமடைந்துள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை