ஆசிரியர்களின் பற்றாக்குறைக்கு பெப்ரவரி இறுதிக்குள் தீர்வாம்! அமைச்சர் சுசில்  உத்தரவாதம்

நாடு முழுவும் நிலவிவரும் ஆசிரியர் பற்றாக்குறை பிரச்சினையை எதிர்வரும் பெப்ரவரி மாதம் இறுதியாகும்போது தீர்த்துக்கொள்ள முடியுமாகும். அதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் விசேட கூற்றொன்றை முன்வைத்து எதிர்க்கட்சித் தலைர் சஜித் பிரேமதாஸ முன்வைத்த கோரிக்கைக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர்  சஜித் பிரேமதாஸ குறிப்பிடுகையில் –

சக்பொல வேலைத்திட்டத்தை மேற்கொள்வதற்காக கருணாகலை பொல்கஹவலை அல் இர்பான் வித்தியாலயம் மற்றும் கொழும்பு தாருஸ்ஸலாம் பாடசாலைகளுக்கு நாங்கள் சென்றிருந்தோம். அப்போது அந்த பாடசாலைகளில் நிலவிவரும் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பாக எமக்கு உணர்த்தப்பட்டடிருந்தது.. பாடசாலைகளில் நிலவிவரும் ஆசிரியர் பற்றாக்குறை நாடு முழுவதும் இடம்பெற்றுவரும் ஒன்றாகும்.

அதனால் குறிப்பாக  குருணாகலை பொல்கஹவல அல் இர்பான வித்தியாலயத்தில் 43 ஆசிரியர் இருக்கவேண்டும். ஆனால் அங்கு 21ஆசிரியர்களே தற்போது கடமையில் இருக்கின்றனர். அதேபோன்று தாருஸ்ஸலாம் பாடசாலையில் 63 ஆசிரியர்கள் இருக்கவேண்டும். ஆனால் அங்கு 33 ஆசிரியர்களே இருக்கின்றனர். இந்த பாடசாலைகளில் பாரியளவில் ஆசிரியர் பற்றாக்குறை இருந்து வருகிறது. அதனால் இந்த 2 பாடசாலைகளிலும் நிலவிவரும் ஆசிரியர் பற்றாக்குறையை  நீக்க விரைவாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறேன்.

அவ்வாறு இல்லாவிட்டால் எமது நாட்டு கல்வி நடவடிக்கை முறையற்ற முறையிலேயே செயற்படுகிறது என்றே தெரிவிக்க வேண்டி வரும்.  இந்த 2 பாடசாலைகளில் மாத்திரம் அல்ல, நாடு முழுவதுமாக 40ஆயிரம் ஆசிரியர் பற்றாக்குறை நிலவி வருகிறது. அதனால் ஆசிரியர் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

அதற்கு கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பதிலளிக்கையில்,

பட்டதாரிகள் 22ஆயிரம் பேரை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுத்தபோது அது தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு 9 மாதங்களாக விசாரணை செய்து கடந்த வாரமே அது முடிவுக்கு வந்தது.அடுத்த வாரமாகும்போது நீதிமன்ற உத்தரவு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.

அதேபோன்று 13ஆயிரத்தி 500பேரை இணைத்துக்கொள்வதற்காக மாகாணசபைகள் நடவடிக்கை எடுத்திருக்கின்றன. அதுதொடர்பில் நீதிமன்றில் எழுத்துமூல உத்தரவு இருக்கின்றன.

அந்த உத்தரவு கிடைக்கப்பெற்றால் பெரும்பான்மையான ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வு கிடைத்துவிடும். மேலும் 5500 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்குவதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்படும். தற்போது பரீட்சை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. பெப்ரவரி மாதம் இறுதியாகும்போது ஆசிரியர் பற்றாக்குறை பிரச்சினைக்கு தீர்வுகாண முடியுமாகும். – என்றார்.(

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.