சனத் நிசாந்தவின் மரணம் தொடர்பில் சமூக வலைத் தளங்களில் அவதூறு! விசாரணைகள் ஆரம்பம்

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணம் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்களை வெளியிடுபவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படுவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

சனத் நிஷாந்தவின் மரணம் குறித்து சமூக ஊடகங்களில் எதிர்மறையான பதிவுகள் வெளியாகி வருகின்றன எனவும் அவற்றை அங்கீகரிக்க முடியாது எனவும்  அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், அவதூறான கருத்துக்களை வெளியிடுபவர்கள் யார் என்பது தெளிவாகத் தெரிகிறது. இது தொடர்பாக மேலும் விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.