தமிழரசின் புதிய தலைவருக்கு மன்னாரில் பெரும் வரவேற்பு!

இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராகத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை வரவேற்கும் முகமாக மன்னாரில் வரவேற்பு நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த வரவேற்பு நிகழ்வானது, வியாழக்கிழமை மாலை 4.30 மணியளவில் மன்னாரில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, மன்னாரை வந்தடைந்த சிவஞானம் சிறீதரன், மன்னார் நகரில் அமைந்துள்ள தந்தை செல்வாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார்.

இதனை தொடர்ந்து, அவர், மன்னார் ஆத்தூர் பிரதான வீதியில் அமைந்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட கிளைக்கு மோட்டார் சைக்கிள் பவனியாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

அதேவேளை, குறித்த நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான கோடீஸ்வரன், பா.அரியநேந்திரன், சிறீநேசன் ஆகியோரும் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமியும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.