கிளிநொச்சியில் கஞ்சா கடத்தல் : 4 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது, இருவர் தப்பியோட்டம்

யுத்திய நடவடிக்கையின் போது நேற்று வெள்ளிக்கிழமை (26) கிளிநொச்சியில்  மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் லொறியொன்றில் கடத்தி செல்லப்பட்ட  4 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

லொறியொன்றில் கஞ்சா கடத்தி செல்லப்படுவதாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு  கிடைத்த தகவலையடுத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இருவர் தப்பியோடியுள்ளனர்.

குறித்த வாகனத்தை சோதனையிட்ட போது சூட்சுமமாக மறைத்து எடுத்து செல்லப்பட்ட 4 கிலோ எடை கொண்ட இரு கஞ்சா பொதிகளை பொலிஸார் கைப்பற்றினர்.

குறித்த கஞ்சா பொதியையும், கடத்த பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும், கைதான சந்தேகநபரையும் மாங்குளம் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர் .

தப்பி சென்ற இரு சந்தேக நபர்களையும் கைது செய்யும் நடவடிக்கை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது .

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.