நாரம்மலயில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் மூவர் உயிரிழப்பு : ஒருவர் காயம் !

நாரம்மல – கிரியுல்ல பிரதான வீதியின் கிவுல்கல்ல வளைவுக்கு அருகில் இன்று சனிக்கிழமை (27)  காலை இடம்பெற்ற வீதி விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, இந்த விபத்தில் காயமடைந்த நபர் ஒருவர் குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கொள்கலன் வண்டியும் முச்சக்கர வண்டியும் மோதியதாலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முச்சக்கரவண்டியில் நால்வர் பயணித்த நிலையில் சம்பவ இடத்திலேயே மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொள்கலன் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.