நல்லூர் கோவில் நிர்வாக அதிகாரி குமரேஷ் ஷயந்தன குமாரதாஸ மாப்பாண முதலியாரின் தாயார் காலமானார்
நல்லூர் கந்தசாமி கோவிலின் பத்தாவது நிர்வாக அதிகாரி அமரர் குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் துணைவியாரும் தற்போதைய பதினொராவது நிர்வாக அதிகாரி குமரேஷ் ஷயந்தன குமாரதாஸ மாப்பாண முதலியாரின் தாயாருமான அமரர் சுகிர்தாதேவி குமாரதாஸ் மாப்பாண முதலியார் ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரது இறுதிக்கிரியைகள் யாழ்ப்பாணம் நல்லூர் மாப்பாணர் வளவில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இடம்பெறும்.
அதைத் தொடர்ந்து, அன்னாரது பூதவுடல் தகன கிரியைகளுக்காக செம்மணி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. (05)
கருத்துக்களேதுமில்லை