தாய்லாந்து பிரதமர் இலங்கை விஜயம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பின் பேரில் தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 03 ஆம் திகதி  நாட்டிற்கு வருகை தரவுள்ளார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெறும் விழாவில் அதிதியாகத் தாய்லாந்து பிரதமர் பங்கேற்கவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது, தாய்லாந்து பிரதமர், ஜனாதிபதி விக்கிரமசிங்கவுடன் உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களை மேற்கொள்வதுடன், வரலாற்று சிறப்புமிக்க இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் கைச்சாத்திடவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. (05)

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.