சிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்ற முதியவர் பரிதாப மரணம்!

சிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்ற முதியவர் சுகவீனமடைந்து உயிரிழந்துள்ள நிலையில் அவரது சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்க  நல்லதண்ணி பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

தலங்கம பிரதேசத்தை சேர்ந்த 70  வயதுடைய முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 14 ஆம் திகதி  சிவனொளிபாதமலைக்கு யாத்திரைக்கு சென்ற இவர் திடீரென சுகவீனம் அடைந்த நிலையில் மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்கான டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார் .

முதியவர் சிகிச்சை பலனின்றி கடந்த 19ஆம் திகதி உயிரிழந்துள்ளதுடன் இவரை வைத்தியசாலையில் சேர்த்தவரின் தொலைபேசி இலக்கம் வைத்தியசாலைக்கு வழங்கப்படவில்லை என நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்தனர்.

முதியவரின் சரியான முகவரி  மற்றும் தொலைபேசி இலக்கம் இல்லாத காரணத்தால் இவருடைய சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்க நல்லதண்ணி பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.