பொதுஜனபெரமுன கட்சி கொள்கைகள் சந்தர்ப்பவாதமாக மாற்றப்பட மாட்டாது! நாமல் ராஜபக்ஷ திட்டவட்டம்

எதிர்வரும் பொதுத் தேர்தலை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மிகவும் வலுவாக எதிர்கொண்டு நாட்டை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கட்சியின் தேசிய அமைப்பாளரான முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ வெளிநாட்டில் இருப்பதால் கட்சியின் பொறுப்பை ஏற்பாரா என ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கட்சியின் கொள்கைகள் சந்தர்ப்பவாதமாக மாற்றப்பட மாட்டாது எனவும் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.