எதிர்காலம் பற்றிய கனவைக் கொண்டுவருகின்ற புதிய மக்கள் எழுச்சியொன்று அவசியம் தேவை! அநுர குமார திசாநாயக்க கூறுகிறார்

அனைத்து துறைகளையும் புதிய நோக்கங்களால் நிரப்பி மாற்றியமைத்திட வேண்டும். புதிய சமூக மாற்றமொன்று தேவை.  அந்த மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்வது ஒரு தனிமனிதனின் அல்லது அரசியல் கட்சியின் செயற்பொறுப்பு மாத்திரமல்ல. மக்கள் அனைவரும் ஒருவராக ஒரே மூச்சில் எழுந்துநின்று உறுதியான திடசங்கற்பத்துடன்  செயலாற்ற வேண்டும் என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர்  அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

அண்மையில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட  பெண்கள் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அநுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

செய்திகளைப் பார்த்தால் அவர்கள் எம்மைப்பற்றி கூறுகின்ற கதைகளையே காண்கிறோம். எமது ஆட்சியின்கீழ் நாங்கள் என்ன செய்யப்போகிறோம் என்பதைக் கூறுபவர்களும் அவர்களே. சர்வதேச நாணய நிதியத்திலிருந்து வந்து  எம்முடன் பேசிய விடயங்கள் பற்றிக் கூறுவதும் அவர்களே. அவர்களின் திகைப்பும் அச்சமும் இவை மூலமாகத் தெளிவாகின்றது.

அதற்கு மேலதிகமாக அவதூறுகள், பொய்யான தகவல்கள், ஒருசிலரது அச்சுறுத்தல்கள்  போன்ற பலவிடயங்கள் இருக்கின்றன. இன்று முதல் அவை மேலும் அதிகரிக்கும். களுத்துறை மாவட்டத்தில் குழுமியுள்ள பெண்களின் பெருவெள்ளத்தை பார்க்கும்போது அவர்கள் மேலும் பீதியடைவார்கள், அவதூறாக பேசுவார்கள்.  எமது நாட்டில் மோசடியின் உச்சத்தை எட்டிப்பிடித்த, குற்றச்செயல்களின் பாதுகாவலர்களாக விளங்கிய, மக்களின் செல்வத்தை கோடிக்கணக்கில் சூறையாடிய, அதனோடு பின்னிப்பிணைந்த பாதாள உலகத்தை நிர்மாணித்த, அதனோடு ஒட்டிஉறவாடிய கொள்ளைக்கார வளையத்தை  நிர்மாணித்த எமது நாட்டின் மூர்க்கத்தனமான பாசறைக்கு எதிராகவே நாங்கள் இந்த அரசியல் அணிதிரலை உருவாக்கி இருக்கிறோம். நாட்டை நாசமாக்கிய, மக்களை துன்பக் கடலில் அமிழ்த்திய, நாசகார பாசறைக்கு எதிராக  நாங்கள் இந்த பாசறையை உருவாக்கி இருக்கிறோம். அதனால் அவர்கள் தாமாகவே அதிகாரத்தைக் கைவிடப்போவதில்லை. நாங்கள் தோல்வியடைந்த சந்தர்ப்பங்களில்   அடுத்த நாளில் இருந்தே அரசியலில் ஈடுபட்டு வந்திருக்கிறோம். அவர்கள் தோல்வியுற்றால் அவர்கள் அனைத்தையுமே இழந்துவிடுவார்கள்.

அதனால் இறுதிவரை எமது முயற்சியை தோற்கடிக்க அவர்கள் செயலாற்றுவார்கள். சேரக்கூடிய எந்தவொரு வகையையும்சேர்ந்த அணியுடன் ஒன்றாக மேடையில் ஏறுவார்கள். ரணில் – மைத்திரி – சந்திரிக்கா கூட்டு வெகுவிரைவில் வெளிவரும்.  ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக குறைகூறியவர்கள்கூட அந்த அணியில் இணைந்துகொள்வார்கள். எழுந்துவருகின்ற முற்போக்கு மக்கள் இயக்கத்தை தோற்கடித்திட மேலும் சிலர் ஒரே மேடையில் இல்லாவிட்டாலும் இரண்டு மேடைகளில் இருந்துகொண்டு ஒரே வேலையை செய்யத் தொடங்குவார்கள். மக்களின், தாய்நாட்டின் பகைவர்கள் தமது ஒரேயொரு எதிரியாக தேசிய மக்கள் சக்தியைத் தெரிவுசெய்துள்ளார்கள். அந்த அனைத்துவிதமான அச்சுறுத்தல், குறைகூறல்,  பகைவனின் செயல்கள் எமக்கு மேலும் பலத்தையும் தெம்பினையும்  நம்பிக்கையையும் தருகின்றது. இந்த வருடத்தில் மாற்றத்தை ஏற்படுத்த நாங்கள் தயார். அதனைச் சாதிக்க முடியும். எமது நாட்டின் பெண்களை அரசியல்ரீதியில் முனைப்பற்றவர்களாக வைத்திருக்கவேண்டுமென அவர்கள் சதாகாலமும் சிந்தித்தார்கள். அதைப்போலவே பெண்களை ஏமாற்ற இயலுமென அவர்கள் நினைத்தார்கள். பெண்களை அரசியலில் செயலற்றவர்களாக்கி, பிள்ளைகளைத் தூக்கிக்கொண்டு, பெருநிலத்தில் இருந்துகொண்டு பெண்களை ஏமாற்றமுடியுமென அவர்கள் நினைத்தார்கள். எனினும் தற்போது இலங்கை வரலாற்றிலும் தேர்தல் வரலாற்றிலும் பலம்பொருந்திய பெண்கள் எழுச்சி தேசிய மக்கள் சக்தி ஊடாக உருவாக்கப்பட்டுள்ளது.

விடாமுயற்சியுடன் வெற்றிவரை தமது செயற்பொறுப்பிற்கு தோள்கொடுப்போம் என்பதே எதிர்பார்ப்பினை சுமந்த இந்த முகங்களில் வெளிப்படுகின்றன. அதிகாரத்தை பரிமாற்றிக்கொள்ளும் தேர்தலொன்று இந்த வருடத்தில் கட்டாயமாக வரும். ஏழு எட்டு மாதங்களுக்கு கிட்டிய காலத்தில் கழிகின்ற மிகமுக்கியமான காலப்பகுதி பிறந்துள்ளது. முன்னொருபோதும் இருந்திராதவகையில் நாமனைவரும் செவிசாய்ப்போம். விழிப்படைவோம். முனைந்து செயலாற்றுவோம். உறுதியாகவே இந்த இந்த பணியை வெற்றியில் முடிக்க இயலும். நாங்கள் அரசியல் பலத்தைக் கைப்பற்றுவது இறுதியானதல்ல. இது நாட்டை மாற்றியமைப்பதன் தொடக்கமாகும். ஒட்டுமொத்த முறைமையும் சீர்குலைந்த ஒரு நாட்டில் ஓரிரு விடயங்களுக்கு தீர்வுகாண முடியாது. அனைத்து துறைகளையும் புதிய நோக்கங்களால் நிரப்பி மாற்றியமைத்திட வேண்டும். புதிய சமூக மாற்றமொன்று தேவை.  அந்த மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்வது ஒரு தனிமனிதனின் அல்லது அரசியல் கட்சியின் செயற்பொறுப்பு மாத்திரமல்ல. மக்கள் அனைவரும் ஒருவராக ஒரே மூச்சில் எழுந்துநின்று உறுதியான திடசங்கற்பத்துடன்  செயலாற்ற வேண்டும். அதனால் மீளக் கட்டியெழுப்புதல் ஒட்டுமொத்த மக்களினதும் பணியாகும். அதற்காக அனைவரையும் விழிப்படையச்செய்து அனைவரும் செயற்படவேண்டும். முதலில் அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொண்டு இரண்டாவதாக நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக இடையீடுசெய்ய வேண்டும். அதற்கான புதிய தேசிய எழுச்சி எமக்குத் தேவை. எதிர்காலம் பற்றிய நலமான கனவைக் கொண்டுவருகின்ற புதிய மக்கள் எழுச்சியொன்று அவசியமாகும்.

மனிதர்களின் ஒத்துணர்வினை பிறருக்கு அறிவிக்கக்கூடிய கலைஞன், இலக்கியவாதி, பொறியியலாளன், கல்விமான், கமக்காரன், மீனவன் உள்ளிட்ட அனைவரதும் பிரதான பங்குதாரராக எமது நாட்டின் பெண்கள் மாறியுள்ளார்கள். சமூகத்தில் அனைவருமே பாதிக்கப்பட்டிருந்தாலும் அந்த அனைவரையும்விட பெண்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த மாற்றத்தை ஏற்படுத்த நீங்கள் விழித்தெழுங்கள் என அழைப்புவிடுக்கவே நாங்கள் வந்திருக்கிறோம். சாதகமான எதிர்பார்ப்புக்களுடனேயே இதற்கு முன்னர் பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு நீங்கள் வாக்களித்தீர்கள். எனினும் மேற்படி எதிர்பார்ப்புகளை முழுமையாகவே சிதைத்துவிட்ட ஆட்சியாளர்கள் அவர்களைச் சுற்றிக் குழுமியுள்ள சிறிய வளையத்திடம்  அனைத்துச் செல்வங்கனையும் ஒன்றுதிரட்டி அவர்களின் எதிர்காலத்தை அமைத்துக் கொண்டார்கள். பொதுமக்களை ஏமாற்றி அதிகாரத்தைப் பெற்றுக்கொண்ட அவர்கள் சதாகாலமும் சமூகத்தில் அனைத்துச் சிறப்புரிமைகளையும் அனுபவிக்கின்ற ஆட்சியைக் கட்டியெழுப்பினார்கள். பொதுமக்களின் ஆட்சியொன்றை நிறுவி அனைவரதும் இடையீட்டுடன்  நாட்டைக் கட்டியழுப்பிடவே நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.  அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வது எமது தொடக்கநிலையே என்பதை விளங்கிக்கொண்டு அனைவரும் முனைப்பாக செயலாற்ற ஒன்றுசேர்வோமாக. – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.