மொறவௌ பிரதேச செயலகத்தில் பால்மா பொதிகள் வழங்கும் நிகழ்வு.

ஹஸ்பர் ஏ.எச்

திருகோணமலை மாவட்டம் மொறவௌ பிரதேச செயலகத்தில் பால் மா பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

பன்குளம் இராணுவ அதிகாரி லெப்.கேணல் பிலிமத்தலாவேயின் அனுசரணையுடன் பிரதிப்பணிப்பாளர் (திட்டமிடல்) ம.துஷ்யந்தனின் வழிகாட்டலுக்கிணங்க பிரதேச செயலாளர் ஆ.நவேஸ்வரன் தலைமையில் மொறவௌ பிரதேச செயலகபிரிவில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான பால்மா பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை  பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.

பிள்ளைகளின் ஊட்டச்சத்தை அதிகரிக்கவும் ஆரோக்கியமான உடல் உள வளர்ச்சிக்கு ஓர் உறுதுணையாகவும் இது அமைகிறது.

இந் நிகழ்வில் மொறவௌ உதவி பிரதேச செயலாளர் கே.சத்தியப்ரியா, மொறவௌ பிரதேச செயலக கள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.