கல்வெட்டை இடித்து சேதப்படுத்திய குற்றச்சாட்டு ஹென்றி மகேந்திரனுக்கு தண்டப்பணம் அறவீடு!

பாறுக் ஷிஹான்

அம்பாறை கல்முனை நகரில் எம்.எஸ்.காரியப்பர் வீதி  என பெயரிடப்பட்ட நினைவுப்படிகத்தை  இடித்து தரை மட்டமாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக வழக்கில் பிரதிவாதியான  ரெலோ இயக்கத்தின் செயலாளர் நாயகமும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமாகிய  ஹென்றி மகேந்திரனுக்கு
1500 ரூபா தண்டபணமும் 55000 ரூபா நஷ்டஈடும் விதித்து கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2015 ஆண்டு அம்பாறை கல்முனை நகரில் எம்.எஸ்.காரியப்பர் வீதி  என பெயரிடப்பட்ட நினைவுப்படிகம் ரெலோ இயக்கத்தின் செயலாளர் நாயகம் ஹென்றி மகேந்திரன் என்பவரால் இடித்து தரை மட்டமாக்கப்பட்டிருந்தது.

இதன் பின்னர்சட்ட விரோதமாக கூட்டம் கூடியமை மற்றும்  மாநகர சபைக்கு சொந்தமான உடைமையை சேதப்படுத்தியமை போன்ற குற்றச்சாட்டுக்களின் பேரில் கல்முனை  பொலிஸாரால்
அவர்  கைது செய்யப்பட்டு நீதிமன்றப் பிணையில் விடுதலை
செய்யப்பட்டிருந்தார்.

கடந்த 09 வருடங்களாக இவ்வழக்கு விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை குறித்த வழக்கு விசாரணை கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன்  முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் பாதிக்கபட்ட தரப்பினர்  உட்பட  ஏனைய தரப்பினரின் விடயங்களை ஆராய்ந்த நீதிவான்  எம்.எஸ். காரியப்பர், வீதிப் பெயர் பலகை
உடைத்த ஹென்றி மகேந்திரனை குற்றவாளியாக இனங்கண்ட மன்று  1 500 ரூபா தண்டபணமும் 55 000 ரூபா நஷ்டஈடும்  வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.