தணமல்வில பிரதேசத்தில் கஞ்சா செடி,கசிப்பு காய வைத்த கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளன!
(அஸ்ஹர் இப்றாஹிம்)
தணமல்வில பொலிஸ் நிலைய விசேட பொலிஸ் குழுவினர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சந்தேகத்திற்கிடமான பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றி வளைப்பில் அரை ஏக்கர் கஞ்சா தோட்டம், கசிப்பு மற்றும் காய வைத்த கஞ்சா என்பன கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தணமல்வில பொலிஸார் (29)தெரிவித்துள்ளனர்.
சூரிய ஆற பிரதேசத்தில் மரக்கறி தோட்டத்திற்கு மத்தியில் சுமார் 6 அடி உயரமான 3921 கஞ்சா செடிகளுடன் சந்தேக நபரொருவரும், கிதுல்கொட மற்றும் கோமலிகம பிரதேசங்களில் கசிப்பு தயாரிப்பதற்கான 45,000 மில்லி லீற்றர் ஸ்பிரிட்டும், 2 கிலோ 200 கிராம் காய வைத்த கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என தணமல்வில பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கருத்துக்களேதுமில்லை