தேசிய மட்ட சதுரங்க போட்டியில் மட்டு. புனித மைக்கல் சாதனை!

 

(அஸ்ஹர் இப்றாஹிம்)

கல்வியமைச்சும், அகில இலங்கை பாடசாலைகள் சதுரங்க சம்மேளனமும் இணைந்து ஒழுங்கு செய்திருந்த அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட சதுரங்க போட்டியில் மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரி மாணவர்கள் ஐந்து பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

குருநாகல் மாவட்டத்திலுள்ள நான்கு பாடசாலைகளில் இப் போட்டிகள் இடம்பெற்றன.

போட்டிகளில் மூன்று முதலிடங்களும், ஒரு இரண்டாமிடமும், ஒரு மூன்றாமிடமும் கிடைக்கப்பெற்றன.

9 வயது அணித்தலைவர் சா.ஆசூஸ்மன் 6 போட்டிகளில் 5.5 புள்ளிகளையும், 17 வயது அணித்தலைவர் சு.வியாசகன் 5 போட்டிகளில் 4 புள்ளிகளைப் பெற்று போட் சம்பியன் ஆகவும் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.