மக்களைக் காப்பாற்றுவதற்கான இறுதிச் சந்தர்ப்பம் : அமைச்சர் மனுஷ!

நாட்டைக் காப்பாற்றுவதற்கான இறுதிச் சந்தர்ப்பம் இதுவே என அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ந்து கூறிவந்தாலும், மக்களைக் காப்பாற்றுவதற்கான இறுதிச் சந்தர்ப்பமே இதுவென அமைச்சர் மனுஷ நாணாயக்கார தெரிவித்துள்ளார்.

தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் ஏற்பாட்டில் நடமாடும் சேவை நிகழ்ச்சியின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று அனுராதபுரத்தில் ஆரம்பமான நிலையில் அங்கு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

இரண்டு வருடங்களுக்கு முந்தைய நிலைமை உங்களுக்கு நினைவிருக்கும் என நான் நம்புகின்றேன். இந்த நாட்டின் பொருளாதார வீழ்ச்சியடைந்த போது அனைவரும் பின்வாங்கியிருந்தனர்.

நாட்டை மீட்டு எடுக்கமுடியாது என தெரிவித்தனர். இந்த நாடு இன்று இருக்கும் நிலைக்கு வந்திருப்பது ஒரு அதிசயம். அனைவரும் முடியாது என தெரிவித்த சந்தர்ப்பத்தில் தற்போதைய ஜனாதிபதி நாட்டைக் கைப்பற்றினார். அவர் ஒரு தலைசிறந்த தலைவர்.

இந்த வரலாற்று சிறப்புமிக்க அனுராதபுரத்தில் இருந்து அந்த கதையை சொல்கிறேன். ரணில் விக்கிரமசிங்க கொள்கை இல்லாத, ஆனால் தீர்க்கமான முடிவுகளைக் கொண்ட தலைவர்.

நாட்டை காப்பாற்ற இதுவே கடைசி வாய்ப்பு என அனைவரும் கூறினர். ஆனால் மக்களைக் காப்பாற்றுவதற்கான கடைசி வாய்ப்பு இப்போது உள்ளது.

மக்களை காப்பாற்றக்கூடிய ஒரே தலைவர் ரணில் விக்கிரமசிங்க என்று நான் கூறுகிறேன்” என அமைச்சர் மனுஷ நாணாயக்கார மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.