இளைஞர்களுக்கு பாதுகாப்பான புலம்பெயர்வு திருகோணமலையில் விழிப்புணர்வு நிகழ்வு!

 

(ஹஸ்பர் ஏ.எச்)

மனிதவள திணைக்களத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலகம் மற்றும் திருகோணமலை நகரசபையின் பொது நூலகத்துடன் இணைந்து இளைஞர்களுக்கான பாதுகாப்பான புலம் பெயர்வு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு சர்வதேச புலம் பெயர்தலுக்கான அமைப்பின் மூலம் புதன்கிழமை திருகோணமலை நகரசபை பொது நூலக மண்டபத்தில் இடம் பெற்றது.

இந்த நிகழ்வு திருகோணமலை நகரசபையின் செயலாளர் வெ. இராஜசேகர் தலைமையில் நடைபெற்றது. பட்டணமும் சூழலும் பிரதேச செயலக மனிதவள அபிவிருத்தி உத்தியோகஸ்தர் தெ. புரபானந்தன் நிகழ்வை மேற்கொண்டிருந்தார்.

நிகழ்வில் திருகோணமலை நகரசபையின் நிர்வாக உத்தியோகத்தர் என் . பரமேஸ்வரன் , பிரதம நூலகர் நா . யோகேஸ்வரன் நூலகர் றிம்சானா , நூலக உதவியாளர்களான உ . ரஜனிக்காந்தன் , அ . அச்சுதன் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.