அல் ஷவாஜ் மும்மொழிகளில் அழகுக் கலை நூல் வெளியீடு

 

(அஸ்ஹர் இப்றாஹிம்)

திருமணம், அழகுக் கலை விடயங்கள் அடங்கிய முதலாவது மும்மொழிகளிலும்மான ‘அல் ஷவாஜ் சஞ்சிகை வெள்ளவத்தையில் உள்ள கிறீண் பௌஸ் மண்டபத்தில் வெளியீட்டு வைக்கப்பட்டது.

நூலின் முதற்பிரதியை சஞ்சிகையின் பிரதம ஆசிரியை பாத்திமா சஸ்னாவிடமிருந்து பிரதம அதிதியாக கலந்து கொண்ட டவர் ஹோல் நிறுவனத்தின் பணிப்பாளா் சபை உறுப்பினா் புரவலா் ஹாசீம் உமர் பெற்றுக் கொண்டார்.

இந் நிகழ்வில் டெயிலி எக்ஸ்பிரஸ் ஆங்கில பத்திரிகையாசிரியை ஹனா இப்ராஹிம், கொழும்பு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி பரினா ருசைக், வை.டப்ளியு எம்.எம். ஏ பெண்கள் அமைப்பின் தலைவி பவாஸா தாகா , அழகுக்கலை நிபுணரும் விரிவுரையாளருமான மபாசா பாருக் மற்றும் அழகுராணி போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்ற இமாசா டில்சானி பெரேரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.