சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மகளிர் கிளைகள் புணரமைப்பு

நூருல் ஹூதா உமர்

கல்முனை பிரதேசத்தில் 16 ஆம் வட்டாரத்தில் கல்முனை- 10,11,12 ஆம் கிராம சேவகர் பிரிவுகளுக்கான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி மகளிர் கிளைகள் புணரமைப்பு கூட்டம் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய இணைப்பாளரும், கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயருமான றஹ்மத் மன்சூர் தலைமையில் இன்று (வியாழக்கிழமை) கல்முனையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ், பிரதி செயலாளர் மன்சூர் ஏ காதர், பிரதி தேசிய அமைப்பாளரும், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, அம்பாறை மாவட்ட குழுவின் செயலாளரும், கல்முனை முன்னாள் மாநகர சபை உறுப்பினறுமான ஏ.சி.சமால்டீன், அரசியல் அதிஉயர் பீட உறுப்பினரும், முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான எம்.எஸ்.எம்.நிஸார், முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினரான ஏ.கே.கலில் றகுமான், கல்முனை பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவர் ஏ. ஹனிபா மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.