நடைபாதை வியாபார நிலையங்கள் வவுனியா நகரசபையால் அகற்றம்!

 

வவுனியா சந்தை சுற்றுவட்ட வீதியில் அமைந்துள்ள
நடைபாதை வியாபார நிலையங்கள் நகரசபையால் இன்று (வெள்ளிக்கிழமை) அகற்றப்பட்டன.

வவுனியா பொது வைத்தியசாலை சந்தியில் இருந்து கொரவப்பொத்தான வீதி மற்றும் சந்தை உள்வட்ட வீதி ஆகியவை நடைபாதை வியாபாரிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் பாதசாரிகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டுவருகின்றனர். இதனால் அடிக்கடி வாகன நெரிசல் ஏற்பட்டுவருவதுடன், விபத்துக்களை சந்திக்கும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது.

நடைபாதைகளை ஆக்கிரமித்து வியாபாரம் மேற்கொள்ளப்படுவதால் பாதசாரிகள் பிரதான வீதியால் நடந்து செல்லவேண்டிய அவலநிலைமை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் நகரசபை நடவடிக்கை எடுத்திருந்தபோதிலும் தினந்தோறும் நடைபாதையை ஆக்கிரமிக்கும் வியாபார நிலையங்கள் அதிகரித்து செல்கின்றன.

இந்நிலையில் சந்தைசுற்றுவட்ட வீதிக்கு இன்றையதினம் சென்ற வவுனியா நகரசபை உத்தியோகத்தர்கள் மற்றும் போக்குவரத்து பொலிஸார் நடைபாதை வியாபாரநிலையங்களை அகற்றியதுடன், அவர்களது பொருள்களையும் பறிமுதல் செய்தனர்.

இதேவேளை கொறவப்பொத்தான வீதியில் அமைந்துள்ள நடைபாதை விற்பனை நிலையங்களையும் அகற்றுவதற்கான நடவடிக்கையினை நகரசபை எடுக்வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.