ஜம்பு நிலக்கடலைச் பயிர்ச்செய்கையை ஊக்குவிக்க விவசாய உபகரணங்கள்!

( வி.ரி.சகாதேவராஜா)

விவசாய நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் ஜம்பு நிலக்கடலை பயிர்ச்செய்கை நடவடிக்கையை ஊக்குவிக்கும் பொருட்டு ஐரோப்பிய யூனியன் நிதிப்பங்களிப்புடன் செயற்படுத்தப்பட்டு வரும் வேலைத்திட்டத்தின் கீழ் திருக்கோவிலில் தெரிவு செய்யப்பட்ட 88 பயனாளிகளுக்கு விவசாய உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

திருக்கோவில் பிரதேச செயலகத்தில்  பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

பிரதம அதிதியாக  அம்பாறை மாவட்ட  செயலாளர் சிந்தக அபேவிக்ரம கலந்து கொண்டு தெரிவுசெய்யப்பட்டுள்ள  பயனாளிகளுக்கு வழங்கிவைத்தார்.

இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் திருமதி எஸ்.நிருபா, கிழக்கு மாகாண விவசாய திணைக்களத்தின் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.ஞானச்செல்வம்,  கிழக்கு மாகாண விவசாய திணைக்களத்தின் விவசாய விஞ்ஞானி ஏ.அருணந்தி, நிர்வாக உத்தியோகத்தர் ரி.மோகனராஜா, கிராம சேவைக்கு பொறுப்பான நிருவாக உத்தியோகத்தர்  என்.கந்தசாமி, திட்டத்திற்கான கள உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், பயனாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.