சம்மாந்துறை ஐ.பீ.எம்.கழகம் புதிய சீருடை அறிமுக நிகழ்வு!
(எம்.ஐ.எம்.அஸ்ஹர் )
சம்மாந்துறை மண்ணில் விளையாட்டு கழகமாகவும், சமூக சேவை அமைப்பாகவும் வெற்றிகரமாக செயற்பட்டு வந்த ஐ.பீ.எம். கழகமானது இவ்வாண்டு 15 ஆவது ஆண்டை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளது.
இந்தப் 15 ஆவது வருட பூர்த்தியைக் கொண்டாடும் வகையில் சம்மாந்துறை அல் அமீர் பாடசாலையில் புதிய சீருடை அறிமுக விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உரை பெயர்ப்பாளர் முஹம்மட் நஜிமுடீன் பிரதம அதிதியாகவும் சமூக ஆர்வலர் அனீஸ் விஷேட அதிதியாகவும் கலந்து கொண்டு கழகத்தின் புதிய சீருடையை அறிமுகம் செய்தனர்.
இந்நிகழ்வில் கழக நிர்வாக உறுப்பினர்கள், கழக உறுப்பினர்கள், நலன் விரும்பிகள் எனப் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கருத்துக்களேதுமில்லை