நற்பிட்டிமுனை லாபீர் வித்தியாலயத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் விஜயம்! மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் கையளிப்பு

கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தின் கீழுள்ள நற்பிட்டிமுனை கமுஃகமுஃ லாபீர் வித்தியாலயத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் (புத்தகப்பை) வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (02)வெள்ளிக்கிழமை பாடசாலை அதிபர் சீ.எம். நஜீப் தலைமையில் பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான, நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு பாடசாலையில் உள்ள குறைநிறைகளை பாடசாலை நிர்வாகத்திடம் ஆராய்ந்ததுடன், மாணவர்களிடம் கல்வி மேம்பாட்டு விடயங்கள் தொடர்பில் உரை நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ். சஹதுல் நஜீம், கல்முனை பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம். ஜௌபர், கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு உறுப்பினரும், நாடாளுமன்ற உறுப்பினரின் பொதுஜன தொடர்பாடல் செயலாளருமான யூ.எல்.என்.ஹூதா உமர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நற்பிட்டிமுனை அமைப்பாளரும், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினருமான யூ.எல். தௌபீக், பாடசாலை பிரதி அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு உறுப்பினர்கள், பழைய மாணவர்கள் சங்க பிரதிநிதிகள், மாணவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.