நிந்தவூர் வைத்தியாலை அபிவிருத்தி பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும்;! பைசால் காசிம் எம்.பி. உறுதி

(ஏயெஸ் மௌலானா)

நிந்தவூர் ஆதார வைத்தியாலையின் அபிவிருத்திப் வேலைத் திட்டங்கள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என்று திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் எம்.பி. உறுதியளித்துள்ளார்

வெள்ளிக்கிழமை வைத்தியசாலைக்கு கள விஜயம் மேற்கொண்ட அவர்  வைத்தியசாலையின் நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்தார்.

இதன்போது வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் எம்.பி.ஏ.வாஜித் தலைமையில் வைத்தியசாலையின் எதிர்கால அபிவிருத்திப் பணிகள் தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடினார்.

வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைத் திட்டங்கள் தொடர்பான முன்மொழிவுகளும் சமர்ப்பிக்கப்பட்டன. இதற்காக அரசாங்கம் மற்றும் அவற்றுக்குப் பொறுப்பான அதிகார மட்டங்களுடன் கலந்துரையாடி விரைவில் வேலைத் திட்டங்களை ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார்.

இந்நிகழ்வில் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஷகீலா இஸ்ஸதீன், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் பிரதம பொறியியளலாளர் எம்.ஹக்கீம், பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் திட்டமிடல் வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.சி.ஏ. மாஹிர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.