அம்பாறை மாவட்ட சுதந்திரதின விழா

பாறுக் ஷிஹான்

இலங்கையின் 76 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் நாடு பூராகவும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

76 ஆவது சுதந்திரதின விழா நிகழ்வு அம்பாறை நகரத்தில்  அம்பாறை ஏரிக்கரைக்கு முன்பாக  அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம தலைமையில்  வெகுவிமரிசையாக இடம்பெற்றது.

76 ஆவது அம்பாறை மாவட்ட தேசிய சுதந்திர விழா அணிவகுப்புடன் ஆளுநரின் தேசியக் கொடி ஏற்றலுடன் ஆரம்பமானது. போர்வீரர்களை நினைவு கூர்ந்த பின்னர், மரியாதை அணிவகுப்பு மட்டுமன்றி, சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் பர்கர் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கலாசார நிகழ்ச்சியும் இடம்பெற்றது.

இவ்விழாவின் இறுதியில் ஆளுநரின் முயற்சியின் கீழ் கலை நிலையங்கள், பாடசாலைகள், மாணவர் நாணல் குழுக்கள், இசைக்குழுக்கள், தேசிய கீதக் குழுக்களில் பங்குபற்றிய சிறார்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

மேலதிக மாவட்ட செயலாளர் வி.ஜெகதீசன், மேலதிக மாவட்ட செயலாளர்  நிலந்த டி சொய்சா, பிரதிப் பொலிஸ் மா அதிபர் தமயந்த ஸ்ரீபத்ம, தலைமையாசிரியர்கள், பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், நிறுவனங்களின் தலைவர்கள், பாதுகாப்பு பிரிவின் தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் இதில் கலந்து கொண்டனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.