இலங்கையின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ரோயல் மெட்ரிட் கழகத்தால் நடந்த விளையாட்டு விழா

சம்மாந்துறை நிருபர் எஸ்.என்.தில்சாத் பர்வீஸ்

இலங்கை சனநாயக சோஷலிச குடியரசின் 76 ஆவது சுதந்திர தின விழா ரோயல் மெட்ரிட் விளையாட்டு கழகத்தின் ஸ்தாபக தலைவர் ஏ. தானிஸ் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் எமது நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த படைவீரர்கள் மற்றும் ஏனையவர்காளுக்காக 2 நிமிட மௌன பிரார்த்தனையும் இடம்பெற்றது.

இன் நிகழ்வுக்கு சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலய அதிபர் எம். டி.எம். ஜனோபர், ரோயல் மெட்ரிட் விளையாட்டு கழகத்தின் தலைவர் ஏ.ஆர்.எம். அஷ்ரிப், பொது நிர்வாகம் உறுப்பினர் எம்.டி.எம். ரிசா, முகாமைத்துவ சபை உறுப்பினர் எச்.எம். ஹாரிஸ், சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்க உறுப்பினருமான கே.ஆர்.எம். ரிசாட், எச்.எம்.எச். ஹோல்டிங் உரிமையாளர் சியாஸ், மாவட்ட விளையாட்டு அதிகாரி சப்ரி நிசார் என பலரும் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.