கல்முனை ஆதார வைத்தியசாலையில் இடம் பெற்ற சுதந்திர தின நிகழ்வு!

(வி.ரி. சகாதேவராசா)

நாட்டின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் 76 ஆவது சுதந்திர தின விழா சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்வு வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி இரா. முரளீஸ்வரன்  தலைமையில் இடம்பெற்றது.

வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி இரா.முரளீஸ்வரனால் தேசியக்கொடி ஏற்றலுடன் தேசிய கீதம் இசைக்கப்பட்டு, பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் அணிவகுப்பு இடம்பெற்று தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

பணிப்பாளரால் சிறப்புரை வழங்கப்பட்டது.

தனது உரையில், வைத்தியசாலையில் கடமையாற்றும் அனைத்து உத்தியோகத்தர்களும் இக்கட்டான நிலையில் சிறந்த முறையில் கடமையாற்றுவதைப் பாராட்டியதுடன் வைத்தியசாலைக்கு வரும் நோயாளிகளுக்கு திருப்தியான சிறந்த சேவையை வழங்குவதற்கு ஆலோசனையும் வழங்கியதோடு எந்நிலை வந்தாலும் அவற்றை வென்று சிறந்ததொரு வைத்திய சேவையை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மேலும் இதேபோன்று சிறந்த சேவைகளை நோயாளர்களுக்கு வழங்கி எமது பிரதேச வாழ் மக்களுக்கு மிகச் சிறந்த மருத்துவ சேவை கிடைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்த சுதந்திர தினத்தில் அனைவருக்கும் பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் வைத்தியசாலையின் கணக்காளர் எம்.கேந்திரமூர்த்தி, தாதியபரிபாலகர் என்று. சசிதரன், தாதியபரிபாலகி திருமதி எல்.சுஜேந்திரன், நிர்வாக உத்தியோகத்தர் ரி. தேவஅருள், பிரதான சுகாதார முகாமைத்துவ உதவியாளர் திருமதி ரோஷி சுகுமார் மற்றும் விடுதி பொறுப்பு தாதிய உத்தியோகத்தர்கள், பொறுப்பு உத்தியோகத்தர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், துணை மருத்துவ சேவை உத்தியோகத்தர்கள், நிறைவுகான் தொழில் வல்லுனர் சேவை உத்தியோகத்தர்கள், குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர்கள், விடுதி மேற்பார்வை உத்தியோகத்தர்கள், சிற்றூழிய மேற்பார்வையாளர்கள் மற்றும் சுகாதார உதவியாளர்களும், ஊழியர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாற்சோறும் வழங்கி நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.