சாய்ந்தமருது குவாஷி நீதிமன்ற வளாகத்தில் மர நடுகை திட்டம்

பாறுக் ஷிஹான்

76 ஆவது சுதந்திர தின விழா நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது  குவாஷி நீதிமன்ற வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இதன் போது தேசியக் கொடியை குவாஷி நீதிமன்ற நீதிபதி அஹமட் லெப்பை ஆதம்பாவா ஏற்றி வைத்தார்.

இந்நாட்டின் சுபீட்சத்திற்காகவும் சமாதானத்திற்காகவும் இந்நாட்டு மக்கள் ஐக்கியப்பட்டு வாழவேண்டும் என்பதற்காகவும் தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் இந் நிகழ்வில் ஜனாதிபதியின் விசேட பணிப்புரையின் கீழ் மர நடுகை நிகழ்வு இடம்பெற்றது.

மேலும் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த படைவீரர்கள் மற்றும் ஏனையவர்களுக்காக 2 நிமிட மௌன பிரார்த்தனையும் இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து மௌலவி ஏ.எம் நவாஸ் துஆ பிரார்த்தனை மேற்கொண்டார்.இந்நிகழ்வில் குவாஷி நீதிமன்ற நிர்வாகச் செயலாளர் எஸ்.ஜமால்டீன் குவாஷி நீதிமன்ற நியாய சகாயர்களும் சாய்ந்தமருது பிரதேச செயலக உளவளத்துறையின் உத்தியோகத்தர் பாத்திமா சியானாஈ சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை உறுப்பினரும் ஓய்வு பெற்ற நீர்பாசன உத்தியோகத்தருமான ஏ.எம் றஸீட், பதிவாளரும் சமாதான நீதவானுமாகிய எம்.எஸ்.றவூசூக்  ,பதிவாளர் எம்.ஐ உதுமாலெப்பை மற்றும் குவாஷி நீதிமன்ற காரியல உதவியாளர் எஸ்.எல் ரசீட் மற்றும் உதவியாளர்களான ஏ.டபிள்யூ.எப் சரோபா ,ஏ.எம்.எப் சஸ் ரீன் ,ஏ.எம்.எப்.சுஹா ,எப்.எப்.அஹானி, ஆகியோரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.