பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்கள் கௌரவிப்பு நிகழ்வு

நூருல் ஹூதா உமர்

மருதமுனை இளங்கலை பட்டதாரிகள் அமைப்பின் புதிய நிர்வாகத்தின் முதல் செயற்திட்டமாக 2022ஃ2023 கல்வியாண்டில் அரச பல்கலைக்கழகத்திற்குத் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் மருதூர் கொத்தன் கலையரங்கில் வெகு விமர்சையாக அமைப்பின் தலைவர் ஏ.பைஹான் அஹமட்  தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வுக்கு அதிதிகளாக இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில், சட்டத்தரணி எம்.ஐ. இயாஸ்தீன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும், அபிவிருத்தி உத்தியோகத்தருமான கலீல் முஸ்தபா, டாக்டர் சஸ்லி ஹமீட், பரக்கத் டெக்ஸ் முகாமைத்துவ பணிப்பாளர் எம்.ஐ.ஏ. பரீட் மற்றும் மருதமுனை இளங்கலைப் பட்டதாரிகள் அமைப்பின் ஆலோசனை சபை உறுப்பினர்கள், இளங்கலைப் பட்டதாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் இந்நிகழ்வில் அதிதிகளால் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.