கஞ்சா பயிர் செய்கை குறித்து டயானா கூறியதில் உண்மையில்லை : பந்துல!

இலங்கையில் கஞ்சா பயிர் செய்வதற்கும் அதனை ஏற்றுமதி செய்வதற்கும் அமைச்சரவை எந்த அனுமதியினையும் வழங்கவில்லை என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன் இது தொடர்பாக எந்த அமைச்சரவையில் முன்மொழிவுகளும் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இலங்கையில் கஞ்சா பயிர்செய்கை மற்றும் ஏற்றுமதி தொடர்பாக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே நேற்று தெரிவித்தார்.

இது தொடர்பாக இன்றைய அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்தபோதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் பந்துல குணவர்தன டயனா கமகே அமைச்சரவை அமைச்சர் அல்ல எனவும் அவர் கூறிய கருத்திற்கு தாம் பொறுப்பல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.