நிந்தவூர் அல் மஸ்ஹர் பெண்கள் உயர்பாடசாலையில் முதலாம் தரத்தில் இணைந்த மாணவர்கள் வரவேற்பு!

(அஸ்ஹர் இப்றாஹிம்)

2024 ஆம் புதிய கல்வி ஆண்டின் முதலாம் தரத்திற்கு இணைந்து கொண்ட மாணவர்களை வரவேற்று மகிழ்விக்கும் நிகழ்வு நிந்தவூர் அல்- மஸ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலையின் அதிபர் எம்.ரி. நௌபல் அலி தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளரும்,  நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான எம்.ஏ.எம். அஷ்ரப்( தாஹிர்) பிரதம அதிதியாகவும் ,   அல்- மஸ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினரும் நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள்  உறுப்பினரும் சட்டத்தரணியுமான ஏ.எல். றியாஸ் ஆதம், அல்- மஸ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலையின் ஓய்வு நிலை அதிபர் ஏ.எல். நிசாமுதீன் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் மற்றும் பாடசாலையின் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்களென பலரும் கலந்து கொண்டனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.