சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலய மாணவன் நிப்லி அஹமட்டுக்கு கௌரவம்

(அஸ்ஹர் இப்றாஹிம்)

சீ.ஐ.சீ.நிறுவனத்தில் கடமையாற்றும் உத்தியோஸ்தர்களின் பிள்ளைகள் கல்வித்துறையில் ஏற்படுத்தியிருக்கும் சாதனைகளை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில் கொழும்பில் நடைபெற்றது.

சீ.ஐ.சீ.நிறுவனத்தின் தொண்டு மற்றும் நலன்புரி அமைப்பால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் நிறுவனத்தின் மனிதவள முதன்மை அதிகாரி அருண ஜயசேகர, பிரதம கணக்காளர்  எரந்தி விக்கிரம ஆராய்ச்சி மாணவனின் பெற்றோர்களான எம்.ஜே.எம்.சியாம், ஏ.சம்சுல் மிர்பியா ஆகியோர் பங்கேற்றனர்.

ஒவ்வொரு வருடமும் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை, க.பொ.த.சாதாரண தர பரீட்சையில் 9 பாடங்களில் ஏ சித்தி, க.பொ.த.உயர்தர பரீட்சையில் 3 ஏ சித்தி மற்றும் பல்கலைக் கழகங்களுக்குத் தெரிவு போன்ற துறைகளுக்கு தெரிவு செய்யப்படும் பிள்ளைகளுக்கு இந் நிறுவனம் கௌரவம் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.