சம்மாந்துறை பிரதேச செயலக உள்ளக கிரிக்கெட் சுற்றுப்போட்டி

(எஸ்.அஷ்ரப்கான்)

சம்மாந்துறை பிரதேச செயலக நலன்புரி அமைப்பால் வருடாந்தம் நடத்தப்படும் உள்ளக கிரிக்கெட் சுற்றுப்போட்டி உதவி பிரதேச செயலாளர் யு.எல்.அஸ்லம் தலைமையில் செவ்வாய்க்கிழமை சம்மாந்துறை பொது விளையாட்டு மைதானத்தில்  இடம்பெற்றது.

உத்தியோகத்தர்களுக்கிடையே உடல் ஆரோக்கியத்தையும், மன வலிமையையும், திறன் வளர்ச்சியையும் ஏற்படுத்தும் நோக்கில் வருடாந்தம் நடைபெறும் இச்சுற்றுபோட்டியில் இம்முறை 8 அணிகள்  கலந்து கொண்டதுடன் அணிக்கு 7 பேர் கொண்ட 5 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட போட்டியாக இது மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

இந்தச் சுற்றுப் போட்டிக்கு  அதிதிகளாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.முஹம்மத் ஹனீபா மற்றும்  அம்பாறை மாவட்ட செயலக பிரதம பொறியியலாளர் ஏ.பி. சாஹீர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இச் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியில் நிர்வாக கிளையும் வெளிக்கள கிளையும் மோதின.

இதில் நிர்வாக கிளை 43 ஓட்டங்களால் வெற்றி பெற்று இந்த ஆண்டு சம்மாந்துறை பிரதேச செயலக உள்ளக கிரிக்கெட் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.