கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றம் எதிர்த்துக் கவனவீர்ப்;புப் போராட்டம்

பாறுக் ஷிஹான்

கிழக்கு மாகாணக் கல்வி திணைக்களம் அண்மையில்  வெளியிட்ட ஆசிரியர் இடமாற்ற பட்டியலை இரத்து செய்யக் கோரி  கல்முனை மற்றும் சம்மாந்துறை கல்வி வலய ஆசிரியர்கள் குழுவினர் அம்பாறை மாவட்ட செயலகம் முன்னால் கவனவீர்ப்பு போராட்டம் ஒன்றை  புதன்கிழமை மேற்கொண்டிருந்தனர்.

இதன் போது  அம்பாறை கச்சேரியில் அம்பாறை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்திற்கு கலந்து கொள்வதற்கு வருகை தந்த திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ்  சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப்  ஆகியோரை  ஆசிரியர்கள் குழுவினர்   சந்தித்து தங்களுடைய பிரச்சினைகளை எடுத்து கூறி மகஜர் ஒன்றினையும் வழங்கி வைத்தனர்.

மேலும் குறித்த மகஜரை பெற்றுக்கொண்ட  இரு  நாடாளுமன்ற உறுப்பினர்களும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு உரிய  விடயத்தை எடுத்து சென்று  நியாயமான தீர்வு ஒன்றைப் பெற்றுத்தருவதாக உறுதி அளித்தனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.