கனகர் கிராமத்தில் கார்த்திகைப் பூ கலாநிதி ஜெயசிறிலுக்கு கௌரவம்
( வி.ரி.சகாதேவராஜா)
அண்மையில் மீள்குடியேற்றப்பட்ட பொத்துவில் அறுபதாம் கட்டை கனகர் கிராமமக்கள், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் காரைதீவு கிளைத் தலைவரும் சமூக செயற்பாட்டாளருமான முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறிலுக்கு சமூக சேவைக்கான கலாநிதி பட்டம் கிடைக்கப்பட்டமையை முன்னிட்டு பெருவரவேற்பளித்துக் கௌரவித்தனர்.
இக் கௌரவிப்பு விழா கனகர் கிராம மண்மீட்புக்குழுத்தலைவி ரங்கத்தனா தலைமையிலான குழுவினரால் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அதன்போது பிரபல சமூக செயற்பாட்டாளர்களான எஸ்.கணேஸ், வி.ரி.சகாதேவராஜா,த.சுபோதரன் மற்றும் கே.சுசிபாலன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
கனகர் கிராமத்தில் கார்த்திகைப்பூ வழங்கி வரவேற்கப்பட்ட ஜெயசிறிலுக்கு அந்த மக்கள் பொன்னாடை போர்த்தி மாலை சூட்டி பாராட்டுக்கள் வழங்கி கௌரவித்தார்கள்.
மீள்குடியேற்றப்பட்ட பொத்துவில் அறுபதாம் கட்டை கனகர் கிராம மக்கள் தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறைபாடுகள் பற்றி எடுத்துக் கூறினர்
கருத்துக்களேதுமில்லை