அரியாலை ஸ்ரீபார்வதி வித்தியாசாலை நிறுவுநர் சிலை திறப்பு விழா நிகழ்வு!
அரியாலை ஸ்ரீபார்வதி வித்தியாசாலை நிறுவுநர் சிலை திறப்பு விழா நிகழ்வு புதன்கிழமை மதியம் இடம்பெற்றது.
இந்த நிகழ்வின் ஆரம்பத்தில் வித்தியாசாலை வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள அமரர் வி.காசிப்பிள்ளையின் சிலை வவுனியா பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் சு.மோகனதாஸால் திறந்து வைக்கப்பட்டது.
மேற்படி சிலையினை முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த பரமேஸ்வரன் றசாந்தன் எனும் இளம் சிற்பி தத்துரூபமான முறையில் வடிவமைத்துள்ளார்.
வவுணியா பல்கலைக்கழக வேந்தரும், பாடசாலையின் பழைய மாணவர் சங்க தலைவருமான பேராசிரியர் சு.மோகனதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், யாழ்ப்பாணம் கல்வி வலய கல்விப்பணிப்பாளர் பொ.ரவிச்சந்திரன், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை