லொறி – ஓட்டோ மோதி விபத்து! ஒருவர் பலி

 

குளியாப்பிட்டி – உடுபத்த பிரதேசங்களுக்கு இடையில் பல்லேவெல பகுதியில் இயந்திர கோளாறு காரணமாக வான் ஒன்று லொறியின் உதவியுடன் இழுத்துச்செல்லப்பட்ட நிலையில் குறித்த லொறியானது ஓட்டோவுடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று (புதன்கிழமை) காலை இந்தச் இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது ஓட்டோவில் பயணித்த தம்பதியினர் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வானை இழுத்துச்சென்ற லொறி சாரதியின் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.