சாய்ந்தமருது இளம் தொழிலதிபர் நீதிக்கான மையத்தால் கௌரவிப்பு!

 

(எஸ்.அஷ்ரப்கான்)

இந்தியா, திருச்சியில் சிறந்த வர்த்தக முகாமைத்துவ பணிப்பாளர்களுக்கான ஆசிய விருது – 2023, பெற்ற நீதிக்கான மைய்யத்தின் பொருளாளர், இளம் தொழிலதிபர் அப்துல் அஸீஸ் அஷ்ரஃப் அலி நீதிக்கான மைய்யத்தால் கௌரவிக்கப்பட்டார்.

இந்நிகழ்வு நீதிக்கான மைய்யத்தின் தலைவர் சட்டமுதுமாணி ஷஃபி எச். இஸ்மாயில் தலைமையில் சாய்ந்தமருது வொலிவேரியன் கலாசார மத்திய நிலையத்தில் அண்மையில் இடம்பெற்றது.

இதில் நீதிக்கான மைய்யத்தின் செயலாளர் கலாநிதி றியாத் ஏ.மஜீத், பிரதித் தலைவர் யூ.கே.எம்.றிம்சான் உள்ளிட்ட நீதிக்கான மையத்தின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இதன்போது ஆசிய விருது பெற்ற இளம் தொழிலதிபர் அப்துல் அஸீஸ் அஷ்ரஃப் அலி நீதிக்கான மையத்தின் பிரதிநிதிகளால் பொன்னாடை போர்த்தி, நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.