முல்லைத்தீவு மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகம், சீருடை துணி வழங்கி வைப்பு

(அஸ்ஹர் இப்றாஹிம்)

வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்ட கல்வி வலயப் பாடசாலை மாணவர்களுக்கு 2024 ஆம் ஆண்டுக்கான இலவச பாடப்புத்தகங்கள் மற்றும் பாடசாலை சீருடைக்கான துணிகளை வழங்கி வைக்கும் நிகழ்வு வெலிஓய மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு பாடசாலை மாணவர்களுக்கு இலவச பாடப் புத்தகம் மற்றும் சீருடை துணிகளை வழங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் வலய ,கோட்ட கல்வி பணிப்பாளர்கள், பாடசாலை அதிபர்கள் ,ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.